தெம்பூட்டும் ரிப்போர்ட்: இந்தியாவின் ஆதிக்கத்தைத் தகர்க்குமா இலங்கை அணி?

3 months agoடி20 போட்டிகளில் இலங்கை அணி சமீபகாலமாக நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களை இலங்கை வென்றுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் 1-1 என சமன் செய்தது. இதன் அடிப்படையில் சமீபத்தில் விளையாடிய 8 போட்டிகளில் 5-ல் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

உபுல் தரங்கா தலைமையில் கொழும்பில் நடைபெறும் நாளைய டி20 போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி கோலி தலைமையிலான இந்திய அணியைத் தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் தொடரை 3-0 எனவும் ஒருநாள் தொடரை 5-0 எனவும் வென்று இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி நாளை நடைபெறும் ஒரே ஒரு டி20 போட்டியையும் வெல்ல முனைப்புடன் உள்ளது.

இந்தப் போட்டியை வென்றால் இலங்கை அணிக்கு மிகக்பெரிய தர்மசங்கடம் ஏற்படும். அதைத் தவிர்க்கவாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இலங்கை அணி.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி நாளை மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.
GET UPDATES