இப்ப சொல்லுங்க.. அவர்களுக்கு மாற்று வேறு யாரும் இல்லை தானே..? அசர வைக்கும் முன்னாள் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு..!!

2 months agoமுதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், அதன்பின் நடந்த ஒரு நாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், இந்தியா முழுமையாக கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது. இன்னும் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் தவிக்கும் இலங்கை அணி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

இதனிடையே இலங்கை அணியின் முன்னாள் வீரரும், வர்ணணையாளருமான ரஸ்ஸல் அர்னால்டு அளித்த பேட்டி: குமார சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனா, திலகரத்னே தில்ஷன் போன்ற வீரர்களுக்கு மாற்றாக யாரையும் கொண்டு வர முடியாது.

அவர்களை போன்று விளையாடும்படி தற்போதுள்ள வீரர்களை வலியுறுத்தவும் முடியாது.

அப்படி வலியுறுத்தினால் அது தவறானது. அதுமட்டுமின்றி தற்போதுள்ள வீரர்கள் மீது அதிகமான அழுத்தத்தை திணிப்பதாகவும் மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
GET UPDATES