தடபுடலாக தயாராகும் இலங்கையின் உயரமான கட்டட நிர்மாணிப்பு பணி: நேற்று ஜனாதிபதி சொன்ன விடயம் என்ன தெரியுமா..?

2 months agoபாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மற்றும் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கண்காணித்தார்.

இந்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, ஏதேனும் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பிரிவினருடன் கலந்துரையாடி, பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக திட்டத்தை துரிதமாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, இலங்கையின் உயரமான கட்டடமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி இன்று கண்காணித்தார்.

350 மீற்றர் உயரம் கொண்ட இந்த கோபுரத்தில், அதிசொகுசு வர்த்தக நிலைய கட்டடத்தொகுதி, உணவகங்கள், வைபவ மண்டபங்கள், பார்வையாளர் கூடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிர்மாணப்பணிகளை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
GET UPDATES