காதலால் ஊரை காலி செய்யும் மக்கள்: எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது..?

2 months agoஆர்.ஆர்.ஆர் புரொடக்ஷன் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் 'நாடோடி கனவு'.

மாஸ்டர் மகேந்திரனாக வலம் வந்தவர் தற்போது ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் படம் தான் இது.

படம் பற்றி இயக்குனர் வீரசெல்வா கூறியதாவது:பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள்.

எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் சொல்கிறோம். படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. என்றார் வீர செல்வா.

GET UPDATES