'ஆண்களுக்கு மட்டும்' - நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி ..??

3 months agoஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தை ரசிகர்களிடம் பரவலாக விளம்பரப்படுத்தும் நோக்கில் போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம்.

‘ஆண்களுக்கு மட்டும்’ என்ற விதிமுறையோடு அறிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டி குறித்து, ‘‘நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற நான்கு வரிகளும் அந்தப் பெண்ணுடனான உங்கள் செல்ஃபயையும் அனுப்புங்கள்! அவர் உங்கள் அம்மாவாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ, காதலியாகவோ அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம், ஒரு பட்டுப்புடவையுடன்...’’ எனக் கூறியுள்ளது ‘மகளிர் மட்டும்’ படக்குழு.
GET UPDATES