ஆட்டுக்குட்டி இறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் காட்சி..!!

2 months agoஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் ஊக்குவிக்கும் நிறுவனமான இறைச்சி மற்றும் கால்நடை ஆஸ்திரேலியா (MLA) சர்ச்சைக்குரிய ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை அதிகரிக்க உருவாக்கப்பட்ட விளம்பரத்தில், விநாயகர் படம் இடம் பெற்று இருப்பது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில், ஒரு பொதுவெளி விருந்து நடக்கும் டேபிளில் விநாயக கடவுள், ஜீசஸ், புத்தர் போன்ற வேடங்கள் அணிந்த நபர்கள் உட்பட பலர் உட்கார்ந்துள்ளனர்.

அவர்கள் ஆட்டுக்குட்டி இறைச்சியின் பெருமையை பேசி விளம்பரம் செய்வது போலவும், உட்கார்ந்திருக்கும் சிலர் சாப்பிடுவது போலவும் விளம்பரத்தில் உள்ளது.

மேலும், ஆட்டுக்குட்டி இறைச்சி எல்லோரும் சாப்பிடக்கூடிய உணவு என விளம்பரத்தில் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த விளம்பரம் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்து சமுதாயத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
GET UPDATES