இது அயல் நாடா இல்லை, எம் நாடா..? சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ளுகள் தமிழ் பாரம்பரியத்தை..!!

3 months agoபராமரிக்க முடியாத ஒரே காரணத்தால், மலேசியா வருத்தத்துடன் கைவிட்ட நாடு சிங்கப்பூர்.

ஆனால் இன்றோ உலகிலேயே சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான் மிக அதிகளவில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதுமான குடிநீர் கிடையாது. கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது. ஆனால், தனியாகப் போராடி, தொழில் துறையில் வல்லரசுகளுக்குச் சவால் விடும் அளவு முன்னேற்றம்…

மென்பொருள், வன்பொருள் வல்லுனர்கள் அதிகமாய் வேலைக்குச் செல்ல ஆசைப் படும் நாடு. சுற்றுலாத்துறையில் அபரிவிதமான வளர்ச்சி.

அவரது ஒரே சூத்திரம் சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்…
தமிழை ஆட்சிமொழி ஆக்கி அழகு பார்த்தார்.

எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான் அத்தனை தமிழனும். இன்னும் முக்கியமாக, சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது.

இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை.

சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தாய் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும் என அரசு கருதுகிறது.

தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழர்களின் ஆர்வமின்மை காரணமாக அது இப்போது இரண்டாவது மொழி ஆகிவிட்டது.

சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

தமிழர்களின் கலாச்சாரத்திற்கு என்றும் மதிப்பளிக்கும் வகையில், தீபாவளியை தீப”ஒளியாக” கொண்டாட இருக்கிறது.

சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் பாரம்பரியத்தை எப்படி பறைசாற்ற வேண்டும் என்று.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் உள்ளது. இப்பவே கொண்டாட தொடங்கி விட்டது சிங்கப்பூர் அரசு.

இது அயல் நாடா இல்லை நம் நாடா என்ற ஒரு ஐயம் எழுகின்றது. அந்த அளவிற்கு இருக்கிறது தமிழர்களுக்கான கவனிப்பு.
GET UPDATES