இந்தியாவிடமிருந்து இலங்கையை நோக்கி வரும் 'வருணா' ரோந்துக் கப்பல் : வரும் முன்னரே இன்னவெல்லாம் நடக்கும்..?

2 months agoஇலங்கை மற்றும் இந்திய கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், 'வருணா' என்ற ரோந்துக் கப்பலை இலங்கையிடம் இந்தியா செவ்வாய்க்கிழமை முறைப்படி ஒப்படைத்தது.

கப்பலுக்கு இலங்கையின் எஎஸ்சிஜி-60 என்ற வரிசை எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அந்தக் கப்பல் அனுப்பப்படுவதற்கு முன்னர், அந்தக் கப்பலைப் பயன்படுத்துவது குறித்து இலங்கை கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் உரிய பயிற்சி அளிப்பார்கள்.

ஒப்படைப்பு நிகழ்ச்சியின்போது பேசிய இந்திய கடலோரக் காவல் படையின் இயக்குநர் ராஜேந்திர சிங், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நல்லுறவால் கிடைக்கும் நலன்களை வரிசைப்படுத்தினார்.

மேலும், வருணா கப்பலின் சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், இலங்கை கடலோரக் காவல் படையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அந்தக் கப்பலை வழங்கி உதவியதற்காக இந்திய அரசுக்கு இலங்கை கடலோரக் காவல்படையின் பொது இயக்குநர் சமந்த விமலதுங்கே, நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்
GET UPDATES