மீண்டும் பேரழிவை எதிர்கொள்ளப்போகும் அமெரிக்கா: சனிக்கிழமையன்று நிகழப்போவது.?

3 months agoஅமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா ஆகிய மாநிலங்களில் 40 பேரை பலிவாங்கிய ஹார்வி சூறாவளியின் தாக்கத்திலிருந்து அம்மாநில மக்கள் முற்றிலும் மீண்டுவராத நிலையில், தற்பொழுது அட்லாண்டிக் கடல்பகுதியில் உருவாகியுள்ள இர்மா சூறாவளி அமெரிக்காவின் கிழக்குக்கரை பகுதி மக்களை பெரிதும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.

அட்லாண்டிக் கடல்பகுதியில் உருவாகியுள்ள இர்மா புயல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது. மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்துடன் பலத்த காற்றுடன், கரீபியன் தீவுகளை நோக்கி இர்மா புயல் நகர்ந்து வருகிறது. அமெரிக்காவின் கிழக்குக் கரைப்பகுதிகள் இந்த சூறாவளிக்கு பாதிக்கப்படலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் 25 செ.மீட்டர் அளவிலான மழை, நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலில் 23 அடி அளவிலான அலைகள் உருவாகும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இர்மா சூறாவளி நெருங்கி வருவதையடுத்து கடந்த திங்களன்று புயர்ட்டோ ரிகோ தீவுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. தொடர்ந்து கரீபியன் தீவுகள் மற்றும் புளோரிடாவிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று இந்த சூறாவளி புளோரிடாவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
GET UPDATES