தூக்கில் தொங்கியது தமிழகத்தின் மானம்: இவ்வளவு உயரத்தில் ஒரு பெண் தூக்கிடுவது சாத்தியமா..?

3 months agoதமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நெரிப்பரிச்சல் மெயின் ரோட்டில் இருந்து, சில அடிகள் தூரத்தில் ஒரு இளம் பெண் மரத்தில் தூக்கில் தொங்குகிறார் என்று தகவல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

காவல் துறை உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வரையில் இளம் பெண்ணின் உறவினர்கள் யாரும் வரவில்லை.

அந்த பெண் வேறு மாநிலத்தின் பெண் போன்று இருந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பெண்ணை விட பல மடங்கு உயரமான மரம். கயிறு கட்ட கூட மேலே ஏறுவது கடினம். இருந்த போதிலும் மரத்தை விட்டு தள்ளியவாறு உடல் தூக்கில் தொங்குகிறது.

அந்த மரத்தில் கயிறை கட்டவே இரண்டு பேரின் உதவி வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தை தற்கொலை என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை செய்துவருகிறார்கள்.

இந்த மரணத்தின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், திருப்பூர் மாநகர காவல்துறைக்கும் பல கோரிக்கைகள் வந்துள்ளது.
GET UPDATES