வீடொன்றை விழுங்கிய புதை குழி: விறுட்டென்று வீட்டார் விழிக்க நேர்ந்த விபரீதம்..!!

2 months agoநோவ ஸ்கோசியாவில் உள்ள ஒரு வீட்டில் கிறிஸ் ஸ்ரிக்கி என்பவர் அவரது மனைவி மற்றும் 13 மற்றும் 16-வயது மகள்களுடன் வசித்து வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடடின் நிலக்கீழ் பகுதியில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு பயந்து எழுந்தனர்.

திடீரென்று சப்தம் கேட்டதால் திருடன் என்று அஞ்சி விட்டனர்.

உடனே பயந்து 911-ஐ அழைக்க அங்கு வந்த அதிகாரிகள் ஆபத்தை ஏற்படுத்தியது திருடர்களல்ல புதைகுழி ஒன்றென கண்டறிந்தனர்.

இந்த அபாயம் மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், இயற்கையினால் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. எவரும் பாதிப்படையவில்லை.

தீயணைப்பு பிரிவினர் வருவதற்கு முன்பாக வீடு மோசமாக பாதிப்படைந்து விட்டது. முதல் மாடி 20-30 அடி புதைகுழிக்குள் சரிந்து விட்டது.

சுற்று சூழல்களிற்கு தீங்கு ஏற்பட முன்னர் தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

GET UPDATES