நாளை முக்கிய கனேடிய விமானங்கள் ரத்து: அட்லாண்டிக் சமுத்திரத்தின் மிகச்சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கும் அபாயத்தில்..

2041 years agoஅட்லாண்டிக் கடல்பகுதியில் உருவாகியுள்ள இர்மா புயல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது. மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்துடன் பலத்த காற்றுடன், கரீபியன் தீவுகளை நோக்கி இர்மா புயல் நகர்ந்து வருகிறது. அமெரிக்காவின் கிழக்குக் கரைப்பகுதிகள் இந்த சூறாவளிக்கு பாதிக்கப்படலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் 25 செ.மீட்டர் அளவிலான மழை, நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் மொன்றியலிலிருந்து புன்ரா கனாவிற்கு புறப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இர்மா அத்திலாந்திக் சமுத்திரத்தின் மிகச்சக்தி வாய்ந்த சூறாவளியாக சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது.

காற்று மணித்தியாலத்திற்கு 295கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுகின்றது என மியாமியில் உள்ள யு.எஸ். தேசிய சூறாவளி மையம் அறிவிக்கின்றது.

மக்களை இர்மாவின் வழியில் இருந்து காப்பதற்காக அமெரிக்க விமான நிறுவனங்கள் மேலதி விமானங்களை கரிபியன் தீவுகளிற்கு அனுப்பி உள்ளது.
GET UPDATES