சரித்திரம் கண்டும் சரிந்த இலங்கை: சமரசம் அடைய கூட தக்க தருணம் அமையவில்லையா..?

3 months agoஇலங்கை அணி கடந்த கால இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மெச்சத்தகு பல சரித்திர சாதனைகளை செய்திருந்தாலும் நேற்று மீண்டும் இந்திய அணியிடம் தோற்று உள்ளது.

அணிக்குள் என்ன தவறு நடக்கிறது என்பதை கூட பேசி தீர்க்க முடியாத அளவிற்கு ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆர்.பிரேமதாஸா மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்சன் 53 ரன்களையும், பிரியஞ்சன் 40 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டுட்டையும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 19.2-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில், விராட் கோலி 82 ரன்களையும், மனிஷ் பாண்டே 51 ரன்களையும் எடுத்தனர்.

இலங்கை அணியில் மலிங்கா, பிரசன்னா மற்றும் உடான ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஏற்கனவே 3 டெஸ் தொடர், 5 ஒருநாள் போட்டிகளை இந்தியா வென்றுள்ளது. தற்போது டி20 போட்டியையும் வென்று இந்திய அணி சாதனை செய்துள்ளது.
GET UPDATES