பேருந்திற்காக காத்திருந்த பொழுது பெயர்ந்து விழுந்த பேருந்து நிலையம்: தமிழகத்தில் நேர்ந்த பரிதாபம்..!!

3 months agoதமிழகத்தில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுனர் சிவக்குமார், துளசிமணி (50), தாரணி (20) கல்லூரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் பிணம் என இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 5 பேர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
GET UPDATES