இந்திய கிரிக்கெட் வீரர் இலங்கையில் மரணம்..!!

3 months agoஇந்தியாவின் 12 வயது கிரிக்கெட் வீரர் மோனாத் சோனா, இலங்கையில் மரணம் அடைந்தார்.

குஜராத்தின் சூரத் பகுதியை சேர்ந்தவர் மோனாத் சோனா, 12. கிளப் அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்க, இலங்கை சென்ற அணியில் இடம் பெற்றார்.

இலங்கையின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள நெகோம்போ பீச் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால், வீரர்கள் தங்கள் அறைகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இருப்பினும், இதை மீறிய மோனாத், சக வீரர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடினார். அப்போது, மோனாத் நீரில் மூழ்கினார்.

உடனடியாக இவரை மீட்டு அருகில் இருந்த பமுனகமா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தார்.
GET UPDATES