தொடர் உபாதைகளிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அடுத்த அதிரடி..?

3 months agoஇலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இத்தருணத்தில் அணி வீரர்களின் உடற்தகுதியை அதிகரிக்கும் நோக்கிலும், தொடர் உபாதைகளிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உடற்தகுதி ஆலோசகராக இங்கிலாந்தின் சசெக்ஸ் கிரிக்கெட் கழகத்தின் உடற்தகுதி மற்றும் மறுசீரமைப்பு ஆலோசகரான ரொப் சேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் முக்கியமான போட்டித் தொடர்களின் போது உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்துடன் இலங்கை அணி வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் பல்வேறு குறைபாடுகளும் அவ்வப்போது காணக்கூடியதாக இருந்தன.

அதனை ஈடுகட்டும் நடவடிக்கையாக ஆலோசகரான ரொப் சேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
GET UPDATES