இப்ப வருத்தப்பட்டு என்ன பயன்..? முன்னரே யோசித்திருக்க வேண்டாமா..? பிரியங்கா சோப்ரா ஃபீலிங்ஸ்..!!

2 months agoபாலிவுட்டை கலக்கிவந்த ப்ரியங்கா சோப்ரா தற்போது 'குவான்டிகோ', 'பேவாட்ச்' ஆகியவற்றில் நடித்ததால் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் ஃபேவரிட் நடிகை ஆகிவிட்டார்.

தான் ஆரம்பகாலத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்ததை நினைத்து வெட்கப்படுவதாக பேட்டியளித்துள்ளார். முகத்தை வெள்ளையாக்கும் கிரீம் விளம்பரம் பற்றித் தான் இப்படித் தெரிவித்துள்ளார். நிறத்தால் பல பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத் தோன்ற வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மகிழ்ச்சி என்பது நிறத்தில் இல்லை, நிறம் சார்ந்து உள்ள பாகுபாட்டைத் தான் வெறுப்பதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
GET UPDATES