அவருக்கு மட்டும் எப்படி அப்படி அமைகிறது..? நயன்தாரா பற்றி நாசுக்காக சொல்லும் ஜோதிகா..!!

a week ago



அவருக்கு மட்டும் எப்படி இப்படி நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமைகின்றன என்று நடிகை ஜோதிகா ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’ வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு கதையம்சங்களை தெரிந்து கொண்ட பின்னர் நடித்தார்.

இந்த நிலையில் நயன்தாரா குறித்து அவர் குறிப்பிடுகையில், ''கதை அமையும் விஷயத்தில் நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன்.

அவருக்கு ஏற்ற மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் எளிதில் அவருக்கு கிடைத்து விடுகிறது. அவருக்கு மட்டும் எப்படி அப்படி கதையம்சம் கொண்ட படங்கள் அமைகிறது'' என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.









GET UPDATES