டார்கெட் கோலி: மாஸ்டர் பிளான் போட்டு மல்லுகட்ட போகும் ஆஸி., பிரபலம்..?

2 months agoஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலியை கட்டுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். அவர் சிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

இந்த தொடரில் அவரை அதிகமாக ரன் குவிப்பதில் இருந்து தடுத்துவிட முடியும் என நினைக்கிறேன். இதை நாங்கள் சரியாக செய்தால் இந்த தொடரில் நாங்கள் சில வெற்றிகளை பெற வாய்ப்பிருக்கிறது.

எங்கள் வீரர்கள், சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்காது என்று நம்புகிறேன்.

GET UPDATES