கனடா பாலின சமத்துவத்தில் உலகிலேயே முன்னணி வகிக்க இதுதான் காரணமா..?

2 months agoசிவில் சேவைகளில் பாலின சமத்துவம் பேணப்படும் நாடுகள் பட்டியலில் 46.4 சதவீத பெண்களுடன் கனடா முதலிடத்திலுள்ளது. சர்வதேச அரசாங்கங்கள் தொடர்பான சமீபத்தய ஆய்வில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு கனேடிய பிரதமராக ஜஸ்ரின் ரூடோ தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவருடைய அமைச்சரவையில்; பாலின சமத்துவத்தை ஏற்படுத்த விரும்புவதாக அறிவித்திருந்தார். அவருடைய விருப்பம் இரண்டு வருடங்களின் பின்னரும் நடைமுறையில் உள்ளதே உலகளாவிய இந்த வெகுமதியாகும்.

அரசாங்க பதவிகளில் பெண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்குவதாக கனடாவின் நற்பெயர் அதிகரித்துள்ளது.

கனடாவை தொடர்ந்து 43.3 சதவீத பெண்களுடன் அவுஸ்ரேலியா இரண்டாவது இடத்திலும் 41.1 சதவீத பெண்களுடன் தென் ஆபிரிக்கா மூன்றாவது இடத்திலும் 40.1 சதவீத பெண்களுடன் பிரித்தானியா நான்காவது இடத்திலும் 37.8 சதவீத பெண்களுடன் பிறேஸில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

GET UPDATES