இருள் சூளும் வேளையில் திருகோணமலை குலுங்கியது: அதிர்வின் அச்சத்தால் பொது மக்கள் பீதி..!!

2 months agoஇலங்கையில் சமீப காலங்களாக இயற்கை அனர்த்தங்கள் வாட்டி வதைத்து வரும் வேளையில் மீண்டும் ஒரு சம்பவம் திரிகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், நேற்று இரவு 8.45 மணியளவில் சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இரவு வேளை என்பதால் மக்கள் அனைவரும் வீட்டில் அண்டி இருந்த வேளையில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அதிர்வின் தாக்கத்தால் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பொருள்கள் கீழே விழுந்து உடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.

நில அதிர்வின் அச்சத்தால் பொது மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

GET UPDATES