ஐயாயிரம் ரூபாய் தாளினால் இலங்கை எதிர்கொள்ளப்போகும் இடர்பாடு..?

2 months ago



இலங்­கை­யை பொருத்தமட்டில் நாண­யத்­தாள் போலி அச்­சி­டலைத் தடுக்கும் தொழில்­நுட்ப முறை கடைப்­பி­டிக்­கப்படாமல் இருக்கிறது.

இதன் விளைவாக நாடு முழு­வ­தும் போலி நாண­யத்­தாள்­கள் வேக­மா­கப் பரப்­பப்­பட்டு வரு­வ­தாக அரச அச்­சுப்­பொறித் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

இதனால் போலி நாண­யத்­தாள் அச்­சி­டப்­ப­டு­வது தொடர்­பில் மோசடி வழக்கு  ஒவ்­வொரு மாத­மும் பதி­வா­கின்­றது. ஒரு மாதத்­திற்கு நான்கு முறைப்­பா­டு­கள் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

கடந்த சில மாதங்­க­ளாக நாடு முழு­வ­தும் மோச­டி­யான முறை­யில் அச்­சி­டப்­பட்ட 5 ஆயி­ரம் ரூபாய் தாள்­கள் பொலி­ஸா­ரி­னால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

போலிகளை கண்டறியும்  மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகளை பின்பற்றாமையே இதற்கு காரணமாகும்.

இவ்வாறான போலி நாணயத்தாள்களை அடையாளம் காணும் நட வடிக்கை கடினமாக உள்ளதுடன், அவ்வாறான சில தொழில்நுட்பங்கள் இந்த நாட்டு வங்கிக் கட்டமைப்புக்குள் மாத்திரமேயுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போலி தாள்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்து வதற்காக 5 ஆயிரம் ரூபாய் தாள்களைத் தடை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று அரச அச்சுப்பொறி திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.









GET UPDATES