'ஆமா நான் தான் செய்தேன்' குற்றத்தினை ஏற்றுக் கொண்ட மஹிந்த..!!

2 months ago
ஆடைகள் தொடர்பாக  இடம்பெற்ற சோசடியில், மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேரர்களுக்கு சமய அனுட்டானத்துக்கான ‘சில்’ ஆடைகளை வழங்குவதற்கான உத்தரவை நானே வழங்கினேன். ஆகவே குற்றத்தினை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாளில் ஊடங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இவ்வாறு கூறி இருக்கிறார்.

அப்போது பேசிய அவர், 'லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் செயற்பாடுகளில் தவறு ஏதும் இல்லை, இவர்கள் விடயத்தில் ஒருதலை பட்சமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சில் ஆடைகளை கொடுப்பதற்காக பணம் ஒதுக்கப்பட்டிருந்தது அதனை நானே முன்னெடுத்தேன் எனக் குறிப்பிட்ட மஹிந்த, அது தேர்தலுக்காக செய்த வேலைத்திட்டம் அல்ல' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில் துணிகளில் எனது புகைப்படங்கள் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான  பொய்யானதாகும்.

அது என்னை தவறாக அடையாளப்படுத்தவே கூறப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


GET UPDATES