கனேடிய நீதிமன்றத்தில் அகப்பட்ட இலங்கை தமிழரின் நிலை..? இறுதியில் காத்திருந்த இன்பஅதிர்ச்சி..!!

2 months ago



எம்வி சன் சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வன்கூவரை வந்தடைந்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மீது ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு கனடாவுக்கு பயணிகளை  அழைத்து வந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனினும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடங்கிய நாள் முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக, குணரொபின்சன் கிறிஸ்துராஜா சிறையில் இருந்தார் என்பதால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை நீதிபதி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அடைக்கலாம் வேண்டியே பயணித்துள்ளனர். இவர் கப்பலின் தலைவரோ அல்லது இந்தப் பயணத்துக்கு மூளையாகச் செயற்பட்டவரோ அல்ல. இவரது குடும்பத்தினரும், ஏனையவர்களைப் போலத் தான் பயணித்துள்ளனர் என்றும் நீதிபதி கதரின் வெட்ஜ் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.










GET UPDATES