உங்கள் உடலிற்குள்ளும் புற்று நோய் ஒளிந்திருக்கிறதா..? பத்தே வினாடிகளில் கண்டுபிடித்து விடலாம்..!!

2 months agoஇன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

'பாவம் ஒரு தப்பு தண்டா கூட செய்யல இவருக்கு போய் இந்த நோவு வந்துருச்சே' என்று கிராம புறங்களில் கூட சாதாரணமாக பேசுவதை காண முடிகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருவியின் மூலமாக வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் புற்றுநோய் கட்டிகளை கண்டறிய முடியும்.

அதுமட்டும் அல்லாது புற்றுநோய் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சிகிச்சை மேற்கொண்ட பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும்.

இது போன்ற துயரத்தைத் தவிர்க்கவும்  இது உதவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

மருத்துவ உலகில் பிரபலாமான சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தப் பரிசோதனைகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பம் 96% துல்லியமாகச் செயல்படுவதாக அக்கட்டுரை தெரிவிக்கின்றது.

GET UPDATES