நடுவானில் சாரை சாரையாக சரிந்த விமானப் பயணிகள்: சவுதி ஏர்லைன்ஸ் சரித்திர பிழை செய்து விட்டதா..?

2 months agoசவுதி அரேபியாவின் மதினா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு, சவுதி ஏர்லைன்ஸ் விமானம் சென்றுகொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள குளிர்சாதன வசதிகள் திடீர் என செயல்படாமால் நின்று விட்டது.

இதன் காரணமாகவும், அதிஉயரத்தின் காரணமாகவும் அங்கு திடீரென்று வெப்ப நிலை அதிகரித்தது. பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது.

இதன் காரணமாக கையில் கிடைத்த காகிதக் கற்றைகளை கொண்டு அனைவரும்காற்று வீசத் துவங்கினர். அத்துடன் சில வயதானவர்கள் இதன் காரணமாக மயங்கிச் சரிந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

பயணிகளில் சிலர் கூறும் பொழுது விமானம் புறப்படும் முன்னரே, ஏறியவுடனே குளிர்சாதன வசதிகள் சரியாக செயல்படாததினைக் கண்டு புகார் கூறியதாகவும், விமானம் புறப்படும் முன்னரே அது சரி செய்யப்படும் என்று கூறியவர்கள் கடைசி வரை சரி செய்யவே இல்ல என்றும் தெரிவித்தனர்.

பின்னர் கடும் சிரமங்களுக்குப் பிறகு மூன்று மணி நேரம் தாமதமாக அந்த விமானம் தரையிறங்கியது.


GET UPDATES