தம்பி.. சட்டைய கிழிச்சுகிட்டு, சாட்டைய எடுத்தா சண்டியன் ஆகிவிட முடியாது: இணையத்தில் வேடிக்கை..!!

2 months agoதமிழகத்தில் இன்றைக்கு காலை நடந்த அதிமுக பொதுக்கூட்டதின் பொழுது சசிகலாவை அதிமுக பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்குவது எனவும்,

அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் பதவியும் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பாயின்ட் பிடித்த திவாகரன் மகன் ஜெயானந்த் சசிகலாவை பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்கிறீர்கள் என்றால், சசிகலா பொதுசெயலாளர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள்.

அப்போ கட்சி விதிப்படி பன்னீர் செல்வம் கட்சி பதவியும் செல்லாது, அதனை தொடர்ந்து எடப்பாடி பதவியும் செல்லாது.

நீங்கள் கூட்டிய கூட்டமும் செயலற்று போகும், ஆதலால் நிறைவேற்றிய தீர்மானமும் செல்லாமல் போகும் என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இதற்க்கு தினகரன் தரப்பினர் அதரவாக  தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்த வேளையில், இடையில் புகுந்த எடப்பாடி ஆதரவினர்

‘தம்பி.. சட்டைய கிழிச்சுகிட்டு, சாட்டைய எடுத்தா சண்டியன் ஆகிவிட முடியாது: உங்க போன் ஒயர் பிஞ்சு ஆறு மாசம் ஆச்சே’ என்று கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டனர்.

அதாவது சசிகலாவே அதிமுகாவின் நியமன தற்காலிக பொது செயலாளராக தான் இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் எதுவுமே செல்லாது என்று இருக்கும் பொழுது, ஜெயானந்த் எப்படி இவ்வளவு அறிவாளியாக இருக்கிறார் என்று சிலாகித்து கொள்கின்றனர்.

GET UPDATES