பேராபத்தை எதிர்நோக்கியிருக்கும் கனடா: ஜோஸ் கனடாவை தாக்கலாம்..?

2 months ago



இர்மா புயலின் தாக்கம் இப்போது தான் அமெரிக்காவில் சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் கரிபியன் தீவுகளின் வடபகுதியில் நிலை கொண்டிருக்கும் ஜோஸ் அடுத்த வாரம்  கனடாவை தாக்கலாம் என கருதப்படுகின்றது.

இருந்த போதிலும் இர்மாவை போல அதிதீவிரமாக  அல்லாமல், ஜோஸ் தற்போது ஒரு மூன்றாம் வகையில் இருந்து 2ம் வகை சூறாவளியாக குறைந்துள்ளது.

குளோபல் செய்தி வானிலை ஆய்வாளர் றொஸ் Hull அடுத்த சில நாட்களில் 1ம் வகைக்கு பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்சமயம் இது அட்லான்டிக்கிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நிலப்பகுதிகளிலிருந்து வெகு தூரத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் கிழக்கு பகுதிகள்-ஒன்ராறியோ, கியுபெ மற்றும் அட்லான்டிக் கனடா உட்பட்ட பகுதிகள் ஜோசின் விளைவுகளை அடுத்தவாரம் உணரும் என கூறப்பட்டுள்ளது.

ஜோசின் அடுத்த அசைவு குறித்து கணனி மாதரியை ஒத்த நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இன்னமும் ஒரு புயல் கணிப்பு யு.எஸ். மற்றும் கனடாவிற்கு உள்ளதென அறியப்படுகின்றது.









GET UPDATES