அங்கக் குறைபாடு உள்ளவர்களின் வாழ்வு மேம்பட நீங்களும் ஒரு அங்கமாக வேண்டுமா..?

2 months agoதிரையுலகில் சின்னக்குயில் சித்திர என்று எல்லோராலும் பரவலாக அறியப்படும் பிரபல பாடகி சித்திரா அவர்கள், எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு ஸ்காபுறோ சண்டனி கிரன்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ள " சித்திரகீதம்" இசை நிகழ்ச்சியில் பாட இருக்கிறார்.


கனடாவில் இயங்கிவரும் "அன்னை தந்த இல்லம்' நிதிக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் "அன்னை தந்த இல்லம்' குழுவினரால் நடத்தபபடுகின்றது. நிகழ்ச்சியில் தனது இனிதான குரலால் அனைவரையும் கவரவும் அங்கக் குறைபாடு உள்ளவர்களின் நலன் பேணும் வகையில் உணர்வுபூர்வமாக இணைந்து அவர்களுக்காக அதிக பட்ச நிதியைச் சேகரிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும்

இது குறித்து பேசிய சித்திரா அம்மையார் " அங்கக் குறைபாடு உள்ளவர்களினதும் அவர்கள் குடும்பத்தினரினதும் வலியை அவர்களே முதலில் அறிவார்கள். எனவே அவர்களது தேவையை உணர்ந்தும் அவர்களது வலிகளுக்கு மரியாதை செய்தும் உதவவேண்டியது மிக அவசியம்" என்று தெரிவித்தார்.GET UPDATES