சுகாதார பிரிவு விடுக்கும் எச்சரிக்கை: ஆபத்தான நிலை உணரப்பட்டுள்ளது..!!

2 months agoஒன்ராறியோ: வின்ட்சரில் வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக இருவர் மரணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை வின்ட்ஸர்-எசெக்ஸ் கவுன்ரி சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.


ஆபத்தான நிலை உணரப்பட்டுள்ளதால் வைரசிற்கெதிராக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவரவர்களை பாதுகாத்து கொள்ளுமாறும் சுகாதார பிரிவு எச்சரிக்கின்றது.


இந்த வருடத்தின் குளிர் மற்றும் வெப்பநிலை பருவம் கெட்ட நுழம்பு சீசன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உறை பனிக்கு கீழ் செல்லும் வரை வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்ந்தும் ஆபத்தானது.


2012-லிருந்து அறிவிக்கப்பட்ட முதலாவது இறப்புக்கள் இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பமானதிலிருந்து பல வெஸ்ட் நைல் வைரஸ் சம்பவங்கள் ஒன்ராறியோவில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் கடைசி பகுதியில் ரொறொன்ரோவில் ஒரு சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் இரண்டும், சிம்கோ-மஸ்கோகாவில் மூன்று சம்பவங்களும். சட்பெரி பெரும்பாகத்தில் ஒன்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

GET UPDATES