அவசர காலங்களில் உலகையே காக்கும் கனடாவின் “டார்ட்”..!!

a month agoஇர்மா புயலினால் பாதித்த கரீபியன் தீவுகளை சென்றடைந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறான தேவைகள் காணப்படுகின்றன, எவ்வாறான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கலாம் என்ற ஆய்வுகளை விரைவாக மேற்கொள்ள கனேடிய குழு விரைந்துள்ளது.


அதனைத் தொடர்ந்து கனடாவின் இராணுவத்தினர், பொதுமக்கள், வெளியுறவுப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினரை அரசாங்கம் உதவிப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் உலகில் எங்கு எப்போது அவசரகால நிலைமை ஏற்பட்டாலும், மிகக்குறுகிய கால நேரத்தினுள் அங்கு சென்று கடமையாற்ற தயாராக உள்ள கனடாவின் “டார்ட்” எனப்படும் சிறப்பு குழுவினரும் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இர்மா புயலில் பெருமளவு கனேடியர்களும் சிக்குண்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கான மேலதிக உதவிகளை கனடா மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவந்த நிலையி்ல், இந்த குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES