அதிகாரங்கள் எந்நேரமும் பறிக்கப்படலாம்- வடமாகாண முதலமைச்சர் பகீர் தகவல்..!!

2 months agoசமஷ்டி முறையிலான தீர்வே அறுதியானதாகவும், உறுதியானதாகவும் அமையும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மேலும், ஒற்றையாட்சியின் கீழ் மாகாணங்களுக்கு எந்தகைய அதிகாரங்களைப் பகிர்ந்தாலும், அவை மீளப் பெறக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.


பிரபல அரசியல் விமர்சகரான குசல் பெரேராவின் நூல் வெளியீடு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் வடமாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கினால் சமஷ்டிக் கோரிக்கைகைவிடப்படுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.


கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறமுடியாதவாறான அதிகாரப் பகிர்வே தேவை. அதனை சமஷ்டித்தீர்வின் மூலமே பெறமுடியும். அதற்கு ஒற்றையாட்சி தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளார்.

GET UPDATES