"இரட்டை இலை"யைக் கைப்பற்ற "தள்ளுமுள்ளு"..!

2 months agoசென்னையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் சாதகமான முடிவை பெற ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி தூதர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.


அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிகள் நேற்று பொதுக்குழுவில் இணைந்தன. இதையடுத்து அதிமுகவில் பொதுச்செயலர் பதவி ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.


தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த முடிவும் வந்துவிடாது. இருப்பினும் சாதகமான முடிவுகளை மேற்கொள்வதற்கான லாபிகளில் அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த விலை கொடுத்தேனும் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது அதிமுக. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் நுழைய முயற்சி செய்யும் வேலையில் இறங்கி விட்டது பாஜக.


GET UPDATES