இந்த பெண்மணி யாரென்று கொஞ்சம் கண்டு பிடியுங்களேன்... உள்ளே காத்திருக்கும் அதிர்ச்சி..!!

2 months agoதென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பின்பு பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க  போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தநிலையில் ”ஆரண்ய காண்டம்” புகழ் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கும் “அநீதி கதைகள்” என்ற படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் சமந்தா, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெண் வேடத்தில் நடிப்பதாக உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கிறாரா? இல்லை திருநங்கை வேடத்தில் நடிக்கிறாரா? என்பது வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.


GET UPDATES