குறும்புக்கார பிள்ளை மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறதாமே..? ஆத்துக்காரர் கண்ணசைத்து விட்டாரா..?

2 months agoதிரையுலகில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை நஸ்ரியா. மலையாள திரையுலகில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமான இவர் ராஜ ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார்.


ஒரு சில ஆண்டுகளே திரைப்படங்களில் நடித்த இவர், பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்துக்குப் பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இத்தனைக்கும் மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் ஃபஹாத் ஃபாசிலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கேள்வி. ஆனாலும் நடிக்க வரவில்லை.


இந்நிலையில், திடீரென நடிப்பில் மீண் டும் ஆர்வம் ஏற்பட்டு சில கதைகளைக் கேட்டு வந்துள்ளார் நஸ்ரியா. ஆனால் எந்தக் கதையுமே திருப்தி தரவில்லையாம்.


தற்போது மூன்று ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நடிப்பு துறைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளாராம் நஸ்ரியா.


பிரபல மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் பிருத்விராஜூடன் நடிக்கவிருக்கும் நஸ்ரியா, அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகவிருக்கும் படத்தில் துல்கர்சல்மான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.GET UPDATES