சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வு..!!

2 months agoசிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக அந்நாட்டை சேர்ந்த ஹலிமா யாக்கோப் தேர்ந்தெடுக்கப்பட்டுளார். சிங்கப்பூரின் அரசியல் சட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி,


நாட்டின் அதிபர் தேர்தலானது ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய இனக்குழுவினருக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி இம்முறை மலாய் இனத்தவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது.


2011ல் அந்நாட்டின் அமைச்சரவையில் இணைந்தவர்ஹலிமா யாக்கோப், 2013ம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகரானார். நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக விதிமுறைகளின்படி கடந்த மாதம் தன்னுடைய சபாநாயகர் பதவி மற்றும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்.


இவரது பதவியேற்பு விழாவானது நாளை காலை அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இஸ்தானாவில் நடைபெறுமென்று, பிரதமர் லீ சீன் ஹுங் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GET UPDATES