அகல இயலாத துயரம் ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு...பிரிட்டன் வெளியேறுகிறது.!!

2 months agoஐரோப்பாவைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியன் இதன் முடிவுக்கு ஏற்பவே உறுப்பு நாடுகள் செயல்படும். இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற பிரிட்டன் திட்டமிட்டது.


இதற்காக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்டு வாக்கெடுப்பிலும் வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டார். அதன் முதல்கட்டமாக இதற்காக நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


அப்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 326 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 290 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரேக்சிட் மசோதா நிறைவேறியுள்ளது.


இருப்பினும் ஐரோப்பிய யூனியனுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான உறவு நீடிக்கும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் ஃபால்டன் தெரிவித்துள்ளார்.

GET UPDATES