அதிகாரியை பதம் பார்த்த ஒரு கோப்பை காப்பி: சுதாரிப்பதற்குள் நிகழ்ந்ததென்ன..?

2 months agoரொறொன்ரோ வாகன தரிப்பிட அமுலாக்க அதிகாரி ஒருவர் மீது காப்பியை வீசியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.


செவ்வாய்கிழமை மாலை 6.30மணியளவில் நடந்துள்ளதாக வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி தவறான இடத்தில் வாகனத்தை தரித்தமைக்காக தவறிழைத்த ஒருவருக்கு ரிக்கெட் வழங்கியுள்ளார்.


டவுன்ரவுனில் போட்லன்ட வீதி மற்றும் கிங் வீதி மேற்கு மூலையில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரி அவ்விடத்தை விட்டு அகன்றதும் 22-வயதுடைய ஒமார் டாக்ஹபானி என்ற குறிப்பிட்ட நபர் தனது வாகனத்தில் ஏறி அதிகாரியை அதி வேகத்தில் துரத்தி சிக்னல் லைட்டில் தடுத்ததுடன் ஒரு கோப்பை நிறைந்த சூடான காப்பியை  அதிகாரி மீது வீசியுள்ளார்.


தவறிழைத்த குறித்த நபர் மீது ஆபத்தான விதத்தில் வாகனத்தை செலுத்திய மற்றும் சமாதான அதிகாரி ஒருவரை ஆயுதத்தால் தாக்கியன போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டது. இந்நபர் அக்டோபர் 16 ரொறொன்ரோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

GET UPDATES