கனடா செல்ல நினைத்து கரிந்து போன கிளிநொச்சி பெண்களின் வாழ்வு: திகிலூட்டும் மர்ம பின்னணி..?

2 months agoஇலங்கையில் இருந்து கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று திடுக்கிடும்  தகவல் வெளியிட்டுள்ளது.


கிளிநொச்சியை சேர்ந்த 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி ஆகிய இருவரும் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மீண்டும் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கிளிநொச்சியில் சலோமி மற்றும் ஜெனி அழகுகலை நிலையத்தை நடத்தி வந்துள்ளனர்.நடுத்தர வர்க்க குடும்ப பெண்களான இவர்களுக்கு, கனடாவில் குடியேற விரும்பம் ஏற்பட்டுள்ளது.


காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள். அங்கு அவர்கள் மூன்று மாதங்கள் நிலையில் தனுஷன் என்ற இலங்கையர்,


இந்த பெண்களை இந்தோனேசியாவிற்கு அனுப்புவதற்கு ஐந்து இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். அவர்கள் ஐந்து நாட்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் கத்மாண்டுவில் இறக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் Thamel என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.


Thamel பகுதியில் இவர்கள் ஏன் தங்கியிருக்கின்றார்கள் என்பது உடனடியாக தெரியவரவில்லை.


அதன் பின்னர் ஒருவழியாக IOM, CIB மற்றும் சக்தி Samuha என்ற மனித கடத்தல் எதிரான NGO குழுக்களினால் இந்த பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


அதன் பின்னர் சக்தி Samuha வீட்டில் சில நாட்கள் பாதுகாப்பாக தங்கியிருந்த இந்த பெண்கள் கடந்த வியாழக்கிழமை இலங்கை திரும்பியுள்ளனர்.இந்த பெண்கள் போன்று கடந்த சில ஆண்டுகளில் பல இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளனர்.


காத்மாண்டுவில் வேறு இலங்கை பெண்களும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்களா? என இனி அடுத்தகட்ட விசாரணையை முன்னெடுக்கும் பொழுது தெரிய வரும்.

GET UPDATES