ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன கடத்தல் கும்பல்..!

2 months agoசமீபத்திய காலங்களாக கனடாவில் சமூக விரோத கடத்தல் கும்பலிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து இருக்கின்றது.


தற்போது டர்ஹாம் கிங்ஸ்ரன் பகுதிகளிலிருந்து 750,000 டொலர்கள் பணம், 20 கிலோக்கள் போதை மருந்து மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பொலிசாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இந்த தீவிர தேடுதல் வேட்டையின் போது 18 பேர்கள் கைது செய்யப்பட்டதுடன் 20-கிலோ கிரம்கள் எடையுள்ள பல வேறு தரப்பட்ட போதை மருந்துகள் இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டர்ஹாம் பிரதேச பொலிஸ் தெரிவித்துள்ளது.


ஒருங்கிணைந்த விசாரனை மூலம் இப்பறிமுதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன. ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் கிங்ஸ்ரன், ஒன்ராறியோ பகுதிகளில் அமைந்துள்ள போதை பொருட்கள் கடத்தும் அமைப்புக்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இந்நடவடிக்கையின் போது மேலும் 3-கார்கள் மற்றும் $150,000 பெறுமதியுள்ள உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து தண்டனைகள் வழங்குவது மூலமாக போதையுடன் தொடர்புடைய கொடூர குற்றங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GET UPDATES