மிரண்டு போனது யூடியூப்... உலகையே 'மெர்சல் ' அடையசெய்த மெர்சல் சாதனை..!! (video)

3 months agoஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசை - ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி மெர்சல் பட டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் டீசர் சாதனை படைத்துள்ளது.

மே 10-ம் தேதி வெளியிட்ட விவேகம் பட டீசரின் தற்போதைய லைக்ஸ் எண்ணிக்கை - 5,99,000; 2.13 கோடி பார்வைகள் கொண்டு முதலிடம் வகித்து வந்தது. இந்த நிலையில் இந்தச் சாதனைகளை மிக எளிதாக முறியடித்துள்ளது மெர்சல் டீசர்.

சமீபத்திய நிலவரப்படி 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி (10,205,444) பார்வைகள் என டீசர் வெளியான 20 மணி நேரங்களில் இந்த உச்சபட்ச எண்ணியை அடைந்துள்ளது மெர்சல் டீசர். இதையடுத்து யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற பெருமையை மெர்சல் பட டீசர் பெற்றுள்ளது.

GET UPDATES