பிக்பாஸில் கணேஷ் செய்த கேவலமான செயல்.! புலம்பிய ஆரவ்…!!

3 months agoதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒருதகவல் வைரலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. 100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 11 நாட்களே இருக்கின்றன.

வீட்டில் முதல் நாளிலிருந்து ஆரவ், சிநேகன், கணேஷ் மூவறும் கடும் போட்டியாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் அனைத்தும் தொலைப்பேசி அழைப்பின் மூலம் கொடுக்கப்படுகிறது.

அதனால் கொடுக்கப்படும் டாஸ்க் எல்லாவற்றையும் தான் முடித்து மதிப்பெண்கள் பெறவேண்டும். இதனால் கணேஷ் தொலைப்பேசியின் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார்.

இதனை பார்த்த ஆரவ், ஹரிஷ் மற்றும் பிந்து இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.மற்ற நேரங்களில் ஜென்டில்மேன் போல் நடந்து கொண்டு இப்போது மிகவும் சுயநலமாக இருக்கிறார்.

தியானம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு கணேஷ் மிகவும் அசிங்கமாக நடந்து கொள்கிறார். ரொம்ப கேவலமாக இருப்பதாக ஆரவ் கூறுகிறார்.
GET UPDATES