மாது.. மது.. முற்றிய போதை... முறிந்த பாதை..!! மூடி மறைக்கப்பட்ட சம்பவம்..!!

3 months agoவெளியில் வராமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கிறது. பாலிவுட் போன்று கோலிவுட்டில் பெருகி வரும் பார்ட்டி கலாச்சாரத்தால் கலங்கி நிற்கிறது கோடம்பாக்கம்.

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய நடிகர் ஜெய் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் அடையாறு பாலத்தில் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அதே காரில் மப்பில் படுத்துக் கிடந்திருக்கிறார் பிரேம்ஜி அமரன்.

இந்த பார்ட்டிகள் நகரத்தை விட்டு சற்று தூரத்தில் உள்ள மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை அல்லது படப்பை போன்ற புறநகர்களில் விடிய விடிய நடக்கிறது. சில பார்ட்டிகளை நடிகைகளே நடத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மதுபாணங்களில் துவங்கும் இந்த பார்ட்டிகள் நள்ளிரவு இரண்டு மணி வரை நடக்கும். இதுபோன்ற பார்ட்டி விஷயங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னணி நடிகர், நடிகைகள் கூட டிரைவர் வைத்துக் கொள்ளாமல் தாங்களே வாகனத்தை ஓட்டி வருகிறார்கள்.

அளவாக குடித்து விட்டு சென்று விடலாம். போலீஸ் தடுத்தால் செல்வாக்கால் தப்பித்து விடலாம் என்பது இவர்கள் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அதையும் மீறி விஷயம் வெளியில் வந்து விடுகிறது.
GET UPDATES