நான்கு வயது சிறுமிக்கு அம்மாவா..? அதிர்ச்சியில் உறைந்த சாய்பல்லவி இரசிகர்கள்..!!

3 months agoஇயக்குநர் விஜய் இயக்கத்தில் கதை நாயகியாக சாய்பல்லவி நடிக்கும் கரு படத்தில் சாய் பல்லவி நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.

ப்ரேமம் மூலம் அறிமுகமாகி எல்லோரையும் தேட வைத்தவர் சாய் பல்லவி. மேக்கப்பே இல்லாமல் இயல்பாக பரு முகத்துடன் அறிமுகமான கோவைப் பெண்ணை தென் இந்திய ஹீரோக்களே தேடினார்கள். ஆனால் யாருக்கும் சிக்காத சாய் பல்லவி இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கரு என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்த கரு படத்தில்தான் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறாராம். அம்மா மகள் இடையே இருக்கும் பாசப் பிணைப்புகள் தான் படத்தின் மையக் கதையே. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த செய்தியை முதலில் தவறாக புரிந்து கொண்ட இரசிகர்கள், சாய் பல்லவிக்கு திருமணமாகி நான்கு வயதில் குழந்தை இருக்கிறது என்று நினைத்து பதறி விட்டனர்.
GET UPDATES