டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளியா..?

3 months agoவடகொரியா தினந்தோறும் பல ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளி என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

வடகொரியாவுக்கு யாராவது ஆணையிட்டால் அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனி வரும் காலங்களிலும் ஏவுகணைச் சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியாவின் இதுமாதிரியான செயல்களைத் தொடர்ந்தால் அவர்களை அழித்துவிடுவோம் என தெரிவித்தார்.

ஆனால், அவரின் இந்தப் பேச்சு எங்களைப் பார்த்து பயந்த நாய் குரைப்பதைப் போன்றது என வடகொரியா பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களுக்கு தக்க விலை கொடுக்க வேண்டியது வரும். டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளி என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கூறினார்.
GET UPDATES