இலங்கையிலிருந்து 11 ஆயிரம் குழந்தைகள் விற்பனை..?

3 months ago1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகளுக்கான நிலையங்களின் ஊடாகவும் மேற்குலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு தரப்பினரும் போலியான ஆவணங்களைத் தயாரித்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் குடும்பத்தினருக்கு மாத்திரம் சுமார் 4 ஆயிரம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் குழந்தைகள் விற்பனையாகியுள்ளன. இது தொடர்பில் விசாரணை நடத்த பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
GET UPDATES