நீதிபதிகளை விமர்சித்தால் நீ இருக்கமாட்ட... தமிழகத்தில் இப்படியும் நிகழ்கிறதா..?

3 months agoதமிழகத்தில் அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பரவும் அவதூறு கருத்துகளுக்கு ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளாட்சித் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுபாஷ் சந்திரபோஸ். இவர், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் ​ஃபேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
GET UPDATES