ரொரன்ரோ கபேஜ்டவுனில் தீவிர தீ... பாரதூரமான காயங்கள் எவருக்கும் ஏற்படவில்லை..!!

3 months agoரொரன்ரோ கபேஜ்டவுன் பகுதியில் ஷேர்போர்ன் வீதி மற்றும் கார்ள்ட்டன் வீதிப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீப்பரவல் அனர்த்தத்தில் இருந்து பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அங்கு தீ தீவிரமாக பற்றி எரிந்தவாறு காணப்பட்டதாக கூற்பபடுகிறது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்து கட்டிடத்தினுள் நுழைந்து, அதற்குள் சிக்குண்டிருந்த ஏழு, எட்டுப் பேரை மீட்டுள்ளதாக  தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர்களில் சிலர் கட்டிடத்தின் உட்புறம் வாயிலாகவும், மேலும் சிலர் ஏணிகள் மூலம் வெளிப்புறமாகவும் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அந்த பகுதியில் ஓரளவு காற்றோட்டத்தினை ஏற்படுத்துவதற்காக, கட்டிடத்தின் வடக்கு பகுதியில் இருந்த சில யன்னல் கதவுகளையும் தீயணைப்பு படையினர் உடைக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனவும், சிலருக்கு மூச்சுத் திணறலுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
GET UPDATES