ஒன்னு கூடியதெல்லாம் ஓகே… உங்களில் யார் அது..?? திகைக்க வைத்த தேர்தல் ஆணையத்தின் கேள்வி..?

3 months agoசசிகலாவுடன் சண்டை போட்டதில் இருந்து அதிமுக தலைமைக்கு தனித்தனியாக உரிமை கோரிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் மீண்டும் இணைந்து விட்டனர். இரு துருவங்கள் இணைந்த பிறகு கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலை பரபரப்பாக்கி உள்ளது.

சசிகலாவை அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்து அக்கட்சியின் பொதுக்குழு கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றிய தீர்மானம், அவரது தலைமையை ஆதரித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி முதல்வர் பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமைத்தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதெல்லாம் அங்கு போய் சேர்ந்தால் தான் யாருக்கு இலையை கொடுக்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் யோசித்து பார்க்கும். இருந்த போதிலும் கட்சியின் சட்ட விதிமுறைகளை தீவிரமாக ஆராய்ந்து, அதன் பின்னரே தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

பொதுசெயலாளர் என்ற பதவியையே இருவரும் இணைந்து நீக்கி உள்ளனர். மேலும் சசிகலாவை ஒதுக்கி வைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை யார் என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் எழுப்ப இருக்கிறது.

இருவருமே தலைமை தான் என்றால் அது சட்டப்படி செல்லுபடியாகாது. அதனால் உங்களில் யார் தலைமை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னரே உண்மையான அதிமுக யார் என்பதை முடிவு செய்து, தேர்தல் ஆணையம் அவர்களிடத்தில் கட்சி தொடர்பான சட்ட அதிகாரங்களை வழங்கும்.
GET UPDATES