கண் மறைப்பு... மனைவியின் கழுத்து நெரிப்பு... கொன்று வீட்டினுள் புதைத்த கணவன்..!!

3 months agoகல்கரியைச் சேர்ந்த 40 வயதான அலென் ஷைபாக் எனப்படும் நபருக்கு தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது சடலத்தை வீட்டினுள் புதைத்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே சில ஆண்டுகள் சிறையில் கழித்துள்ள நிலையில், அவர் மேலும் மூன்று ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2012ஆம் ஆண்டு இந்த கொலை இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளில் குறித்த இந்த நபர் குற்றவாளி என்பது கடந்த ஆண்டில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராற்றின் போது, மனைவி கத்தியால் தாக்க முற்பட்டதாகவும், தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றபோது அலென் ஷைபாக்கின் மனைவி உயிரிழக்க நேரிட்டதாகவும், பயம் காரணமாக அவர் சடலத்தை வீடடினுள்ளேயே புதைத்துவிட்டதாகவும் வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகக் கொடூரமான ஒரு குற்றச் செயல் என்ற போதிலும், அவர் திட்டமிட்டு இந்த கொலையை செய்ததற்கோ, ஆயுதத்தால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கோ எந்தவித ஆதரமும் இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
GET UPDATES